கதிர்காமம் திருவிழாவில் கலந்துகொண்ட நடனக்குழுவில் 15 பேருக்குக் கொரோனா.

கதிர்காமம் முருகன் கோயிலின் வருடாந்தத் திருவிழாவில் பங்கேற்ற நடனக் குழுவினரில் 15 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

காலி பிரசேத்திலுள்ள குரு கெதர ஓய்வு மண்டபத்தில் தங்கியிருந்த நடனக் குழுவில் 11 பேருக்கும், மாத்தறை பிரதேசத்தில் தங்கியுள்ள நால்வருக்குமே தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த நடன்குழுக்களின் அங்கத்தவர்களுக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையிலேயே 15 பேருக்குத் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

தொற்றுக்குள்ளான நடனக் கலைஞர்களைத் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.