பூஸா சிறையில் மேலும் 51 கைதிகளுக்குக் கொரோனா!

பூஸா சிறைச்சாலையில் மேலும் 51 கைதிகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த சிறைச்சாலையில் 56 கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே 51 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் 34 கைதிகளை அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 17 பேரை பூஸா சிறைச்சாலையிலே தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இவ்வாறு இனங்காணப்பட்ட 51 தொற்றாளர்களுடன் பூஸா சிறைச்சாலையில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 768 ஆக உயர்வடைந்துள்ளது எனவும் காலி மாவட்ட சுகாதார சேவைகள் காரியாலயம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.