உள்ளக வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத் திட்டம்.

2 கோடி 43 இலட்சம் செலவில் குருநாகல் பிரதேச சபைக்கு உட்பட்ட மல்லவப்பிட்டிய சிறுக்குனாவத்த பிரதேசத்திலுள்ள 04 உள்ளக வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

2 கோடி 43 இலட்சம் செலவில் குருநாகல் பிரதேச சபைக்கு உட்பட்ட மல்லவப்பிட்டிய சிறுக்குனாவத்த பிரதேசத்திலுள்ள 04 உள்ளக வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழா மாவத்தகம ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் அமைப்பாளரும் மாவத்தகம பிரதேச சபையின் தவிசாளருமான கமல் பெரேராவின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாயளர் அப்துல் சத்தார் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.
குருநாகல் பிரதேச சபையின் தவிசாளர் அச்சல நிமந்த, அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் இணைப்பதிகாரி முஹமட் ரசான், குருநாகல் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் வஹாப் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.