டோக்கியோவில் அமுலில் உள்ள அவசர நிலையை விரிவுபடுத்தியது.

தலைநகர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வேளையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதானால், டோக்கியோவில் அமுலில் உள்ள அவசர நிலையை அண்டைய பகுதிகளுக்கும் மேற்கு நகரமான ஒசாகாவிற்கும் ஜப்பான் வெள்ளிக்கிழமை விரிவுபடுத்தவுள்ளது.

இதன்படி ,சைட்டாமா, கனகாவா, சிபா மற்றும் ஒசாகா ஆகிய பகுதிகளை திங்கட்கிழமை முதல் ஆகஸ்ட் 31 வரை அவசரகாலச் சட்டத்தின் கீழ் வைக்கும் திட்டத்திற்கு ஒரு அரசு குழு ஒப்புதல் அளித்துள்ளது.

டோக்கியோ மற்றும் தெற்கு தீவான ஒகினாவாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டமும் நீடிக்கப்படவுள்ளது.

அந்த அறிவிப்புகளை ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகா வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

ஹொக்கைடோ, கியோட்டோ, ஹியோகோ மற்றும் ஃபுகுவோகா உட்பட மற்ற ஐந்து பகுதிகள் குறைவான அவசரக் கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்படும்.

மேலும் ,டோக்கியோவில் வியாழக்கிழமை உட்பட கடந்த மூன்று நாட்களில் 3,865 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.