‘பீஸ்ட்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர்.

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கலந்துகொண்டு நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் அதிரடி ஆக்ஷனில் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’. நெல்சனின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.அனிரூத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.