டெல்ட்டா தொற்று தீவிரமாக பரவியுள்ள மேல்மாகாணத்தை முடக்க ஆலோசனை.

கொரோனா மற்றும் டெல்ட்டா தொற்று தீவிரமாக பரவியுள்ள மேல்மாகாணத்தை உடனடியாக முடக்குவது குறித்து அரச உயர்மட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது.

அது தொடர்பில் இன்று (06) நடக்கும் கொரோனா செயலணியில் ஆராயப்படவுள்ளது.

இதன்படி ,நாட்டை முற்றாக முடக்காமல், இப்போது கொரோனா மற்றும் டெல்ட்டா வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும் மேல்மாகாணத்தை மட்டும் முடக்குவதற்கும், மாகாணங்களுக்கிடையே மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாட்டை விதிக்கவும் தீவிரமாக ஆராயப்படுகிறது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மேலும் இன்று மாலை இது தொடர்பில் விசேட அறிவிப்பை விடுக்க அரசு எதிர்பார்த்துள்ளதாக அறியமுடிந்தது.

Leave A Reply

Your email address will not be published.