உடல்கள் குவிந்துள்ளன .. அழுகி துர்நாற்றம் வீசுகிறது .. 24 மணி நேரமும் மின் தகனம் தொடர்கிறது

கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பாணந்துறை ஆதார மருத்துவமனை பிணவறையில் சுமார் 45 உடல்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு 22 கொரானா உடல்கள் உள்ளதோடு , அவற்றிலிருந்து கடுமையான துர்நாற்றம் வெளியாகின்றன என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குளிரூட்டிய பிணவறையில் உள்ள சடலங்களின்   அளவு  அதிகமானதன் காரணமாக பிணவறைக்கு உள்ளேயும் வெளியேயும் மற்ற உடல்கள் வைக்கப்பட்டிருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான சடலங்களின் சிதைவு காரணமாக அவற்றிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது.

இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள தகன மாயானங்கள் 24 மணி நேரமும்   செயல்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.