நியூசிலாந்து அரசு அடுத்த ஆண்டு வரை அந்நாட்டு எல்லைகளை மூட உள்ளது

நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஏடன், கொரோனா பரவலை தடுக்கும் நோக்குடன் , நாட்டிற்குள் பிறர் நுழைவதைத் தடுக்க, இந்த ஆண்டு இறுதி வரை , நியூசிலாந்தின் எல்லைகளை மூட முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் விளக்கமளித்த அவர் , கொரோனா நாட்டில் பரவுவதைத் தடுப்பதற்கும், பொருளாதாரத்தைத் திறந்து வைப்பதற்கும் அது பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த ஆண்டு முதல், தனிமைப்படுத்தல் இல்லாத சுற்றுப்பயணத்திற்கு தேவையான தனிப்பட்ட அபாயத்தின் அடிப்படையில் நாடு ஒரு புதிய மாதிரியை நோக்கி செல்லும், என்றும் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

அடுத்த ஆண்டு நாடு மீண்டும் திறக்கப்படும்போது, ​​குறைந்த ஆபத்துள்ள நாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைய  அனுமதிப்பதோடு ,  அதிக ஆபத்து உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழையும் போது ,  14 நாள் தனிமைப்படுத்தலை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் மக்களுக்கான தடுப்பூசியை செலுத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

ஐந்து மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகை உள்ள நியூசிலாந்தில், கொரோணா மரணங்கள் 6 மட்டுமே பதிவாகியுள்ளன.

நியூசிலாந்து , கொரோனாவை மிக அவதானமாக வெற்றிகொண்ட  நாடாக கருதப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.