வடக்கில் இந்தியத் தூதரகம் நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றவர்கள் விபரம்!

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் ‘ஆசாதிகா அம்ரித் மஹோத்ஸவ்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியத் துணைத் தூதரகமானது, வடக்கு மாகாண கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகத்துடன் இணைந்து, வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை இணைய வழியில் நடத்தியது.

வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் இருந்து முதல் மூன்று இடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட 15 வெற்றியாளர்களுக்கும் மொத்தம் 75 ஆயிரம் ரூபா பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கான பணப்பரிசில்களை, இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் வேறோரு சந்தர்ப்பத்தில் நடைபெறும் விழாக்களில் நேரடியாக வழங்குவார். அமைச்சகத்தால் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களின் விவரங்கள்:-

யாழ்ப்பாணம் மாவட்டம்

முதலாம் இடம்:- செல்வி அனோஜிகா (தரம் 13, சிவகுமார் யா/இந்து மகளிர் கல்லூரி)

இரண்டாம் இடம்:- செல்வி கம்சிகா கஜேந்திரன் (தரம் 13, யா/வயாவிளான் மத்திய கல்லூரி)

மூன்றாம் இடம்:- செல்வி சுவஸ்திகா சர்வேஸ்வரன் (தரம் 12, யா/யூனியன் கல்லூரி)

கிளிநொச்சி மாவட்டம்

முதலாம் இடம்:- செல்வி குமார் கிருஷாந்தி (தரம் 12, கிளி/இராமநாதபுரம் மகாவித்தியாலயம்)

இரண்டாம் இடம்:- செல்வி சுப்ரமணியம் பபிதா (தரம் 13, கிளி/கிளிநொச்சி இந்துக் கல்லூரி)

மூன்றாம் இடம்:- செல்வி சுதாகரன் சுவேதிகா (தரம் 12, கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலயம்)

முல்லைத்தீவு மாவட்டம்

முதலாம் இடம்:- செல்வி சுப்ரமணியம் சுடர்ச்செல்வி (தரம் 13, மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி)

இரண்டாம் இடம்:- செல்வி மயில்வாசன் தினேகா (தரம் 13, மு/யோகபுரம் மகாவித்தியாலயம்)

மூன்றாம் இடம்:- செல்வி சசிகுமார் ஷர்மிகா (தரம் 13, மு/உடையார்கட்டு மகாவித்தியாலயம்)

மன்னார் மாவட்டம்

முதலாம் இடம்:- செல்வி றசிக்குமார் சசிகலா (தரம் 11, மன்/முருங்கன் மகா வித்தியாலயம்)

இரண்டாம் இடம்:- செல்வி டியோன்மேரி (தரம் 11, யுஜிதா மன்/முருங்கன் மகா வித்தியாலயம்)

மூன்றாம் இடம்:- செல்வி சுதாகரன் சுதர்ஷிகா (தரம் 11, மன்/முருங்கன் மகா வித்தியாலயம்)

வவுனியா மாவட்டம்

முதலாம் இடம்:- செல்வி மோகனப்பிரதா கோணேஷ்வரன் (தரம் 12, வவு/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி)

இரண்டாம் இடம்:- செல்வி குமுதினி பாலையா (தரம் 13, வவு/பூந்தோட்டம் மகா வித்தியாலயம்)

மூன்றாம் இடம்:- செல்வி ஞா. ரஜீந்தினி (தரம் 12, வவு/புதுக்குளம் மகா வித்தியாலயம்)

Leave A Reply

Your email address will not be published.