கொரோனாப் பெருந்தொற்றால் 16 நாட்களில் 1,926 பேர் மரணம்!

நாடளாவிய ரீதியில் கடந்த 16 நாட்களில் 1926 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் 19 தொற்றினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே இந்த எண்ணிக்கைக் காணப்பிக்கின்றது.

இதற்கமை கடந்த 1ஆம் திகதி 63 மரணங்களும், 2ஆம் திகதி 74 மரணங்களும், 3ஆம் திகதி 82 மரணங்களும், 4ஆம் திகதி 94 மரணங்களும், 5ஆம் திகதி 98 மரணங்களும், 6ஆம் திகதி 98 மரணங்களும், 7ஆம் திகதி 94 மரணங்களும், 8ஆம் திகதி 111 மரணங்களும், 9ஆம் திகதி 118 மரணங்களும், 10ஆம் திகதி 124 மரணங்களும், 11ஆம் திகதி 156 மரணங்களும், 12ஆம் திகதி 155 மரணங்களும், 13ஆம் திகதி 160 மரணங்களும், 14ஆம் திகதி 161 மரணங்களும், 15ஆம் திகதி 167 மரணங்களும், 16ஆம் திகதி 171 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதற்கமைவாக ஒரு மணித்தியாலத்துக்கு 7 கொரோனா மரணங்கள் பதிவாகுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது. 8 நிமிடத்துக்கு ஒரு மரணங்கள் பதிவாகின்றன.

இவ்வாறு மரணமடைந்தவர்களில் 1,482 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.

இதேவேளை, 30 – 59 வயதுக்கு உட்பட்ட 430 பேரும், 30 வயதுக்கு குறைந்த 14 பேரும் மரணமடைந்துள்ளனர்.

கடந்த 16 நாட்களில் 1,101 ஆண்களும், 825 பெண்களும் கொரோனாத் தொற்றால் இதுவரை மரணமடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.