“என்னைப் பொறுத்தவரை இசை என்றாலே அவர்தான். என் வாழ்விலும் இசைப் பயணத்திலும் அவர் கடவுள்.

“இளையராஜா சார் என் கடவுள்!”

இளையராஜாவின் இசையில் வயலினுக்குப் பிரதானமான இடம் உண்டு. இளையராஜா இசைக்குழுவில் இருக்கும் ஒரே பெண் வயலினிஸ்ட் அனிதா பிரான்ஸிஸ் ஜார்ஜ்..

சுமார் 35 ஆண்டுகளாக இளையராஜாவின் இசைக்குழுவில் தொடர்ந்து வாசித்து வருபவர்.

“ஐந்து வயதில் கற்றுக்கொள்ள ஆரம்பிச்சது பியானோதான். அதன் பிறகு, ஐந்தாறு வருஷங்கள் கழித்தே வயலின் வாசிக்க அப்பா கற்றுக்கொடுத்தார். கே.வி.மகாதேவன், ராஜா சாரிடம் அப்பா செல்லோ வாசித்திருக்கிறார். ரொம்பப் பாசமாக இருந்தாலும் வயலின் கற்றுக்கொடுக்கும்போது கறாரான குருவாகிவிடுவார் அப்பா. இப்போது யோசித்தால் அதுதான் என்னை நல்லா வாசிக்க வைக்கிறது என நினைக்கிறேன். மலையாளத்தில் ஷ்யாம் சாரிடமும், பின் உபேந்திராவிடமும் வயலின் வாசித்தேன்.”

“இளையராஜா குழுவில் இடம்பெற்றது எப்போது?”

“அப்பாதான் ராஜா சாரிடம் அழைத்துச்சென்றார். ‘யாரிடமாவது வாசித்திருக்கிறாயா?’ என்று கேட்டார் ராஜா சார். இருவரிடம் வாசித்ததைக் கூறியதும், ‘ஓகே… பார்த்துக்கலாம்’ என்று சொன்னார். அதேபோல அடுத்த ஒரே வாரத்தில் அவர் குழுவில் சேர்த்துக்கொண்டார். முதன்முதலாக, ராஜா சாரின் ரெக்கார்டிங் சென்ற நாளை மறக்கவே முடியாது. மனசில் சந்தோஷம் இருந்தாலும் பயமும் இருந்தது. கூடவே, அப்பாவின் உடல்நிலை பற்றிய கவலையும். எங்க வீட்டின் வருமானம் அப்பா சம்பாத்தியத்தின் மூலமே வந்துகொண்டிருந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் அந்தப் பொறுப்பு என்னிடம் வந்தது. அந்த நேரத்தில் ராஜா சார் என்னைச் சேர்த்துக்கொண்டது எங்கள் குடும்பத்துக்கு பெரிய உதவியாக இருந்தது. அது இன்று வரையிலும் தொடர்கிறது.”

“பாடல் பதிவின்போது என்ன மாதிரியான சூழல் இருக்கும்?”

“ராஜா சார் ரொம்பவும் ஸ்ட்ரிக்ட். அவர், மியூசிக் நோட்ஸ் கொடுத்ததும் நாங்க பிராக்டீஸ் பண்ண ஆரம்பித்துவிடுவோம். அதன்பின் ரிகர்சல், ரெக்கார்டிங் எனப் பரபரப்பாக இருக்கும். பக்கத்தில் இருப்பவர்களிடம்கூடப் பேச நேரம் இருக்காது. அவர் நோட்ஸ் எழுதும்போது, அருவியில் இருந்து நீர் கொட்டுவதுபோல எழுதுவார். சின்னத் திருத்தம்கூட இல்லாமல் எழுதுவதைப் பார்க்கும்போது பிரமிப்பா இருக்கும். அந்த நோட்ஸ் வாசித்து முடித்து, கேட்கும்போது வேறு உலகத்துக்கே அழைச்சுட்டுப் போயிடும்.”

“இளையராஜா கொடுத்த சர்ப்பரைஸ்…”

“நான் பியோனா எக்ஸாமுக்குத் தயார் ஆவதற்காகக் காலை 6 மணிக்கே ஸ்டூடியோவுக்குச் சென்று பிராக்டீஸ் செய்வேன். இதை ராஜா சார் கவனிச்சிருப்பாங்கனு நினைக்கிறேன். அதனால், பின்னணி இசையில் சின்ன பிட் பியோனா வாசிக்க வாய்ப்பு கொடுத்தார். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்புறம், இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, எல்லோரையும் அறிமுகப்படுத்தும்போது, என்னை ‘மைக்கேலின் பொண்ணு அனிதா’ என்று சொன்னார். அவ்வளவு வருடங்கள் கழித்தும் அப்பாவை மறக்காமல் சொன்னபோது, அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. ஒரு சால்வை போர்த்தினாங்க. அதை ரொம்ப ரொம்பப் பத்திரமாக வைத்திருக்கிறேன்”

“இளையராஜா குழுவில் நீங்கள் மட்டுமே பெண் கலைஞர் இல்லையா?”

“வயலின் குழுவில் நான் மட்டும்தான் பெண். ஆனா, இந்தப் பேதம் எல்லாம் வேலை செய்யும் இடத்தில் தெரியாத அளவுக்கு நல்ல சூழல் இருக்கிறது. வெளிநாட்டுக்குப் போகும்போது நிறைய பெண்கள் வயலின் வாசிக்கிறதைப் பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டில் மட்டும் குறைவாக இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இன்னும் நிறைய பேர் இந்தத் துறைக்கு வரணும்.”

“ஒரு வரியில் இளையராஜாவைப் பற்றிச் சொல்வதென்றால்…”

“என்னைப் பொறுத்தவரை இசை என்றாலே அவர்தான். என் வாழ்விலும் இசைப் பயணத்திலும் அவர் கடவுள்…

Leave A Reply

Your email address will not be published.