ஓய்வு பெறுகின்றார் அதிபர் தாமோதரம்பிள்ளை கணேசபாலேந்திரன்.

தென்மராட்சி கல்விவலயத்தில் கைதடி முத்துக்குமாரசாமி மகாவித்தியாலய அதிபராக கடந்த மூன்று ஆண்டுகளாக செயற்றிறன் மிக்க பணியாற்றி வந்த தா. கணேசபாலேந்திரன் அவர்கள் 22.08.2021 அன்று தமது கடமையில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.

மந்துவில் வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயத்திலும் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்திலும் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டவர்.

மன்னார் இலுப்பக்கடவை அ.த.க பாடசாலையில் நீண்டகாலம் அதிபராகக் கடமையாற்றிய இவர் 2005 இல் கைதடி குருசாம க்கு அதிபராக நியமனம் பெற்று பாடசாலையின் பொற்காலமாக விளங்கியது.மட்டுவில் கமலாசினி வித்தியாலயம், மட்டுவில் ஸ்கந்தவரோதய மகாவித்தியாலயம், மட்டுவில் தெற்கு அ.மி.தக பாடசாலை ஆகியவற்றிலும் அதிபராக விளங்கி மட்டுவில் மண்ணிற்குப் பெருமைசேர்த்தவர்.

அரசசேவையில் நீ்ண்டகாலங்களை அதிபராகப் பணியாற்றி கல்விச் சமூகத்திற்கு அளப்பரிய பணியை ஆற்றியுள்ளார். தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்பெறும் என்ற குறளுக்கு அமைய அவரது பணிகளின் மேன்மையை அவர்தம் பிள்ளைகளின் உயர்வுகள் காட்டிநிற்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.