முகமது சிராஜை பாராட்டும் வகையில், பிரமாண்டமான கட் அவுட்.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்டில் அபாரமாக பந்து வீசிய சிராஜ், 2 இன்னிங்ஸ்களிலும் தலா 4 விக்கெட்டுகள் என மொத்தமாக 8 விக்கெட் வீழ்த்தினார். அவரின் இளமை துடிப்பும், வேகமும், கோலியின் ஐடியாக்களை செயல்படுத்துவதிலும் மிகச்சிறப்பாக உள்ளதால், முகமது ஷமிக்கு அடுத்ததாக இந்திய அணிக்கு முன்னணி வேகப்பந்துவீச்சாளர் கிடைத்துவிட்டார் என முன்னாள் வீரர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இதனை உறுதி செய்யும் வகையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 8 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய பவுலர் என்ற சாதனையை முகமது சிராஜ் படைத்துள்ளார். இதற்கு முன் 1982ல் முன்னாள் கேப்டன் கபில் தேவ் லார்ட்ஸில் 8 விக்கெட் வீழ்த்தியிருந்தார். அதன்பின்னர், 39 ஆண்டுகளாக பல்வேறு வேகப்பந்துவீச்சாளர்கள் இந்தியாவுக்கு கிடைத்த போதும், இதனை செய்ய முடியவில்லை. ஆனால் இன்று சிராஜ் 8 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் முகமது சிராஜை பாராட்டும் வகையில், அவரின் சொந்த ஊரான ஐதராபாத் நகரில் மிக பிரமாண்டமான கட் அவுட் ஒன்று நிருவப்பட்டுள்ளது. தான் விக்கெட் எடுத்ததற்கு பிறகு வாயில் விரலை வைத்து ‘உஷ்.. அமைதியாய் இரு’ என்பது போல் செய்து காட்டுவார். அவரின் அந்த பழக்கம் தற்போது இணையத்தில் பேசுப்பொருளாகி வருகிறது. எனவே இந்திய ஜெர்ஸியில் அவர் வாயில் விரலை வைத்திருப்பது போன்றே அந்த கட் அவுட்டும் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.