சிறைக்குள் இருந்தே வைத்தியருக்கு கொலை மிரட்டல் விட்ட ரிஷாட் (Update)

கொழும்பு − மெகஸின் சிறைச்சாலைக்குள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனினால் வைத்தியர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் ,கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிந்திய விரிவான செய்தி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியரை திட்டியதாகவும், மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும் கொழும்பு குற்றப் பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.

புதிய மெகசீன் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சந்தேக நபரான ரிஷாத் பதியுதீன், கடந்த 15ஆம் திகதி தன்னைத் திட்டியதாகவும் மரண அச்சுறுத்தல் விடுத்தாகவும் வைத்தியரான பிரியங்க இந்துனில் புபுலேவெல வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு அளித்த வைத்தியர், பின்னர் பொரளை பொலிஸில் நேற்று (21) முறைப்பாடு அளித்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்தது.

பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய இந்த வழக்கை பொரளை பொலிஸார் தம்மிடம் ஒப்படைத்ததாகவும், சம்பவம் தொடர்பில் முறைப்பாடு வழங்கிய வைத்தியரிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்ததாகவும் கொழும்பு குற்றப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

“நான் இங்கு வந்தபோது நான் என்ன செய்தேன் என்று உனக்குத் தெரியாதா?”

நான் உன்னை வேறொரு உலகத்துக்கு அனுப்ப முடியும், ஒரு மணித்தியாலத்துக்குள் மாற்றி அனுப்ப முடியும்.

நீங்கள் அதிகமாக போராடினால், நீங்களும் உங்கள் காரும் சாலையில் சாம்பலாகி விடுவீர்கள். அதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். அப்போது உங்கள் மனைவி கணவனையும் உங்கள் குழந்தைகள் தந்தையையும் இழப்பார்கள்.

சந்தேக நபரான ரிஷாட் பதியுதீன், “நான் ரிஷாத் பதியுதீன் என்பது உங்களுக்குத் தெரியும்” என்று கூறி தன்னை அச்சுறுத்தியதாக வைத்தியரின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தான் சிறைச்சாலை மருந்தகத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தபோது, அங்கிகரிக்கப்படாத ஒருவர் பலவந்தமாக அத்துமீறி உள்நுழைந்ததாக வைத்தியர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தேவையான தகவல் கிடைத்தவுடன் அவரை வெளியேறுமாறும் தான் அந்த சந்தர்ப்பத்தில் அந்த நபரிடம் தெரிவித்ததாகவும் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

தான் அப்படிச் சொன்னாலும் அறையை விட்டு வெளியேறாதவர், “நீங்கள் பெரிய வைத்தியரா, நீங்கள் என்னிடம் இப்படி பேசுகிறீர்கள்.

இங்கு உங்களை விட பெரிய வைத்தியர்களை நான் அறிவேன். என்னை பரிசோதிக்க வரும் என் நண்பர்களான வைத்தியர்கள், சிறை அதிகாரிகளை அகற்றிய பின்னரே என்னிடம் பேசுகிறார்கள்.

எனக்கு என்ன வேண்டும் என்று அவர்கள் என்னிடம் கேட்கிறார்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பாக எதையும் செய்வார்கள்.

நீங்கள் ஒரு பெரிய வைத்தியரா, என்னுடைய நண்பரான வைத்தியரை இப்போது அழைத்து எடுப்பிக்க முடியும்.

என் வேலையைச் செய்ய நீங்கள் வேண்டியதில்லை. இவ்வாறு ரிஷாட் தன்னை திட்டியதாக முறைப்பாட்டில் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

“எனக்கும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் உள்ளன. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இரண்டையும் தெரியும். உங்கள் ஆயுட்காலம் குறைவு. டொக்டர் நீங்கள் கவனமாக இருங்கள். இங்கிருந்து விரைவாக வெளியேறி ஒளிந்து கொள்ள இடம் தேடுங்கள்”

இவ்வாறு தன்னை அச்சுறுத்தி, அவமானப்படுத்திய, இந்த நபர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பது தனக்குத் தெரியாது என்றும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.