இன்றையபஞ்சாங்கம் 07.09.2021 இன்றைய ராசிபலன்.

சூரிய உதயம் : 06:01
சூரிய அஸ்தமனம் : 18:12
சந்திர உதயாதி நாழிகை : 06:04
சந்திர அஸ்தமனம் : 18:46
ஷகா சம்வத் : 1943 பிலவ
Lunar Month : ஆவணி 22
பட்சம் : கிருஷ்ண பக்ஷம்
திதி : அமாவாசை – காலை 06:21 வரை பின்பு பிரதமை
நட்சத்திரத்தன்று : பூரம் – 17:05 வரை
யோகம் : சாத்தீயம் – 26:22 வரை
முதல் கர்ணன் : நாகவம் – 06:21 வரை
இரண்டாவது கர்ணன் : கிமிஸ்துக்கினம் – 17:32 வரை
சூரிய அடையாளம் : சிம்மம்
சந்திரன் அடையாளம் : சிம்மம் – 22:50 வரை
அபிஜித் : 11:42 – 12:31
துர்முஹுர்த்தம் : 08:27 – 09:16
22:56 – 23:43
அமிர்தகாலம் : 10:54 – 12:27
Varjyam : 23:56 – 25:28
ராகுகாலம் : 15:09 – 16:41
குளிகை : 12:07 – 13:38
யமகண்டம்: 09:04 – 10:35
சந்திராஷ்டமம்
அவிட்டம் +சதயம்

💐மேஷம்
மேஷம்: குடும்பத்தினருடன் உங்கள் நேரத்தை செலவழிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.
💐ரிஷபம்
ரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புது வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
💐மிதுனம்
மிதுனம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
💐கடகம்
கடகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதிதாக ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நல்லது நடக்கும் நாள்.
💐சிம்மம்
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
💐கன்னி
கன்னி: கணவன்- மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
💐துலாம்
துலாம்: உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்கும் படி நடந்து கொள்வீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீரென்று அறிமுகமாகும் நபரால் பயனடைவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். லாபம் பெருகும் நாள்.
💐விருச்சிகம்
விருச்சிகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும் நாள்.
💐தனுசு
தனுசு: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
💐மகரம்
மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் தன்னம்பிக்கை குறையும். உறவினர் நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் சில இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.
💐கும்பம்
கும்பம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் முடியும் நாள்.
💐மீனம்
மீனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

Leave A Reply

Your email address will not be published.