4G வசதிகளற்ற பகுதிகளில் சமிக்ஞை கோபுரங்கள் நிர்மாணம்..

4G வசதிகளற்ற பகுதிகளுக்கான சமிக்ஞை கோபுரங்களை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிராமத்திற்கான தொடர்பாடல் திட்டத்தின் கீழ் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க குறிப்பிட்டார்.

அதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தில் 4G வசதிகளற்ற பகுதிகளில் 37 சமிக்ஞை கோபுரங்களை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த நிர்மாணப்பணிகள் அடுத்த மாதம் நிறைவடையவுள்ளதாக ஓஷத சேனாநாயக்க தெரிவித்தார்.

இதனை தவிர, குருநாகல் மாவட்டத்தில் 47 சமிக்ஞை கோபுரங்களும், மாத்தறையில் 23 கோபுரங்களும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

அநுராதபுரம், கண்டி, பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் 4G வசதிகளற்ற பகுதிகளை கண்டறிந்து , தேவையான சமிக்ஞை கோபுரங்களை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய சமிக்ஞை கோபுரங்களை நிர்மாணிப்பதனூடாக நாடளாவிய ரீதியில் 4G வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதே தமது நோக்கம் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.