இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவை.

இலங்கை மற்றும் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தினை வடக்கு மற்றும் கிழக்கினை மையப்படுத்தி ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியுடன் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பிரதமரின் இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.

இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு
சுமூகத் தீர்வு கண்டு, நல்லுறவை வளர்ப்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் இக் கலந்துரையாடலில்….

போக்குவரத்து அமைச்சர் பிரியங்கா, சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர்
பங்கேற்றிருந்ததாக இராஜாங்க அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதே வேளை இந்தியா சென்றுள்ள இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கிராமிய அபிவிருத்தி, மற்றும் விவசாயம், கைத்தொழில் சார் முதலீடு மற்றும் கால்நடை துறைசார் மேம்பாடு தொடர்பான விசேட பல கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.