வெலிக்கடை-அனுராதபுரம் சிறைச்சாலைகளில் CCTV இல்லை

வெலிக்கடை மற்றும்  அனுராதபுரம் சிறைச்சாலைகளில்  சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை என சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிசிடிவி கேமராக்கள் பூஸ்ஸா, அங்குனகொலபெலஸ்ஸ மற்றும் களுத்துறை சிறைகளில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன.

அதன்படி, சிறைத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்தவால் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்த விசாரணையில் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்த முடியாது என சிறை அதிகாரிகள் தெரிவித்துளனர்.

Leave A Reply

Your email address will not be published.