ஐ.நா வில் பங்கு கொண்டு பேச அனுமதியுங்கள் : தலிபான்கள் கோரிக்கை

சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை தாலிபான் இன்னும் கைவிடவில்லை.

இந்த கோரிக்கையை தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முட்டகி , ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸுக்கு எழுதிய கடிதத்தில் விடுக்கப்பட்டுள்ளது.

இக் கடிதம் முதலில் ராய்ட்டர்ஸால் வெளியிடப்பட்டது மற்றும் தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஷின் , ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. பேச்சாளராக தலிபான்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது வீழ்ச்சியடைந்த ஆப்கான் அரசாங்கத்தில் நியூயார்க்கிற்கான ஐநா தூதர் குல்ஹாம் இசகாகியின் அதிகாரத்தை மீறிய செயலாக கருதப்படுகிறது.

அதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட குழு இப்போது இந்த இரண்டு பிரதிநிதித்துவங்களையும் பரிசீலிக்க வேண்டும்.

திங்கள்கிழமை பொதுச் சபை முடிவதற்குள் இருவரில் ஒருவரை பொதுச் சபைக்கு அழைக்க முடியுமா என்பதும் சந்தேகமே என்கிறார்கள் விமர்சகர்கள்.

Leave A Reply

Your email address will not be published.