மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கோயிலுக்கு செல்லக்கூடாதா?

மனிதர்களில் பெண்கள் மட்டுமே இயற்கை உடற்க்கூறு மாற்றம் அதிகம் கொண்டவர்கள்.ஒரு உயிரை உருவாக்கும் பெரும்பங்கு பெண்களையே சாரும் அதனால்தான் பெண்களை தெய்வத்திற்கு சமமானவர்கள் என்று சாஸ்திரம் போற்றுகின்றது.

அந்த கால கருங்கல் கோவில்கள் மனித உடல்நிலை வெப்பநிலையை பொறுத்தே அமைக்க பட்டது . அதாவது மனித உடலின் சராசரி வெப்பநிலை எவ்வளவோ அதே வெப்பநிலை கருங்கல்லால் கட்டப்பட்ட கோவில்களுக்கும் உண்டு .

மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும் .அந்த நேரங்களில் கோவில்களுக்கு பெண்கள் வந்தால் இன்னும் அதிக படியான உஷ்ணம் உண்டாகும் . இதனால் அதிக படியான ரத்தபோக்கு உண்டாகும் . இதை கருத்தில் கொண்டே கோவில்களுக்கு மாதவிடாய் காலங்களில் பெண்கள் வரக்கூடாது என்று முன்னோர்கள் கூறினார் .

ஒரு பெண்ணிற்குள் உள்ளே என்ன இருக்கிறதோ அதே இரத்தம் தான் மாதவிலக்கு நேரத்தில் வெளியேறுகிறது. மேலும் எந்த இரத்தம் வெளி ஏறுகிறதோ, அதிலே தான் ஒவ்வொரு மனிதனும் கருவாகி, பின்பு திசுவாகி, பிள்ளையாகி, பெரிய ஆளாகிறான்.அதனால் தீட்டு என நவீன காலத்திலும் பெண்ணை ஒதுக்கி வைப்பது முட்டாள்தனமாகும்.

அந்த காலங்களில் பெரியவர்கள் மாதவிலக்கு நேரத்தில் பூரண ஓய்வினை பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தினை கொண்டு செயல்பட்டனர்.

இதுவே காலப்போக்கில் தீட்டு நாட்களில் பெண்களை தீண்ட கூடாது மற்றும் இறைவழிபாடுகளில் ஈடுபடக்கூடாது என்ற மூட நம்பிக்கையாக உருவெடுத்துவிட்டது என்பதே உண்மையான விசயமாகும்.

Leave A Reply

Your email address will not be published.