யாழ்.ஆஸ்பத்திரி வீதி அகலிப்பு மற்றும் அழகுபடுத்தல் செயற்றிட்டம்.

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் ரட்ணம் மருத்தகத்திற்கு அருகில் இருந்து கே.கே.எஸ் வீதி சிக்னல் சந்தி வரை வீதியினை அகலிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் பொது நூலக கேட்போர் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த மாநகர முதல்வர் இவ் வீதி அகலிப்பு தொடர்பான அனைத்து விதமான ஆரம்பக்கட்ட பணிகளும் நிறைவிற்கு வந்துள்ளது. இது செய்யப்படும் போது நகரத்தில் பாரியதொரு மாற்றத்தை காணமுடியும். வர்த்தகர்கள் வீதி அகலிப்பின் நியமங்களின் அடிப்படையில் தங்களது கடைகளை பிள்னகர்த்தி கட்டுமானங்களை மேற்கொள்ளுவதற்குரிய மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அப் பணத்தினை வர்த்தகர்களுக்க வழங்குவதற்கான அங்கீகாரமும் பெறப்பட்டு விட்டது. எனவே மிக விரைவாக தங்களது கடைகளை பின்னகர்த்தி வீதி அகலிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார். மாநகர வர்த்தகர்களின் அவர்களின் வர்த்தக செயற்பாடுகின் விருத்திக்கு யாழ்.மாநகர சபை என்றும் பூரண ஒத்துழைப்பினை வழங்கும். ஏன்எனில் நகர வர்த்தகர்களின் முன்னேற்றமே எமது மாநகரத்தின் முன்னேற்றமாகும். என்றும் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த மாநகர ஆணையாளர் இது ஒரு பொன்னான சந்தர்ப்பம் அதனை நல்லவாய்ப்பாக பயன்படுத்தவேண்டும். நாங்கள் செய்யும் இச் செயற்றிட்டம் நீண்டகாலத்தினைக் கருத்திகொண்டு உங்களது அடுத்த தலைiமுறையினருக்கு ஏற்றவகையில் நகரத்தினை மேம்படுத்துவதற்காக என்றார்.

மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மாநகர ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், பொறியிலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபை பிரதிநிதிகள், வர்த்தக சங்க தலைவர் மற்றும் வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஆஸ்பத்திரி வீதியில் ரட்ணம் மருந்தகத்திலிருந்து கே.கே.ஏஸ் வீதி வரைக்குமான பகுதி அகலிக்கப்படவுள்ளது. வீதியின் நடுவில் இருந்து 10 மீற்றர் தூரம் அகலிக்கப்பட்டு வடிகால் வாகனத்தரிப்பிடம் நடைபாதை என்பனவற்றை உள்ளடக்கி புனரமைக்கப்படவுள்ளது. அத்துடன் குறித்த பகுதியில் வீதியின் நடுவில் தற்போதுள்ள வாகனத்தரிப்பிட பகுதி நீக்கப்பட்டு வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் வாகனங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றது. ஆஸ்பத்திரி வீதியின் ஏனைய பகுதிகளில் தற்போது நடுவில் காணப்படுகின்ற வாகனத் தரிப்பிட வசதி தொடந்தும் காணப்படும்.

மேற்படி கலந்துரையாடலுடன் மறுநாள் குறித்த பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வர்த்தகர்களுடன் ஆராயப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.