அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அரசியல் கைதிகளைச் சந்தித்தார் சுமந்திரன்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று சந்தித்தனர்.

இன்று முற்பகல் 10 மணியளவில் சிறைச்சாலைக்குச் சென்ற மேற்படி குழுவினர் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன் அவர்கள் அண்மையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்தவத்தவினால் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்தனர்.

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கே.சயந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.