பால் மா தட்டுப்பாட்டிற்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை.

சந்தையில் காணப்படும் பால் மா தட்டுப்பாட்டிற்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கால்நடை, கமநல சேவை அபிவிருத்தி, பால் மற்றும் முட்டை தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றினால் உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் பால் மாவின் விலை அதிகரித்துள்ளதுடன், உள்ளூர் சந்தைகளிலும் பால் மாவிற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இறக்குமதி செய்வதில் காணப்படும் சிக்கல்களும் இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் குறிப்பிட்டார்.

இதனால் நாட்டில் திரவப்பால் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாவும், அதற்கமைய கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.