வரலாறு படைத்த பாபர் ஆசம் : விராட் கோலி, கிறிஸ் கெய்லை முறியடித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் பாபர் ஆசம் டி20 கிரிக்கெட்டில் ரூ.7,000 ரன்களை அதிவேகமாகக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். ஞாயிறன்று நேஷனல் டி20 கோப்பை கிரிக்கெட்டில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார் பாபர் ஆசம்.

ராவல்பிண்டியில் சதர்ன் பஞ்சாப் அணிக்கும் செண்ட்ரல் பஞ்சாப் அணிக்கும் இடையிலான போட்டியில் செண்ட்ரல் பஞ்சாப் 120 ரன் இலக்கை விரட்டிய போது 25 ரன்களைக் கடந்த பாபர் ஆசம் 7,000 டி20 ரன்களை அதிவிரைவில் எடுத்த வீரர் என்ற மைல்கல்லை ஏற்படுத்தினார். கிறிஸ் கெய்ல் 192 இன்னிங்ஸ்களில் 7000 டி20 ரன்களையும் விராட் கோலி 212 இன்னிங்ஸ்களில் 7,000 டி20 ரன்களையும் எடுக்க பாபர் ஆசம் 187 போட்டிகளில் 7,000 ரன்கள் மைல்கல்லை கடந்து வரலாறு படைத்தார்.

இந்த 7,000 ரன்களில் பாபர் ஆசம் சர்வதேச டி20 போட்டிகளில் 61 ஆட்டங்களில் 2,204 ரன்களை எடுத்திருந்தார். சராசரி 46.89. இதில் ஒரு சதம் 20 அரைசதங்களை பாபர் ஆசம் எடுத்துள்ளார். இது தவிர தனியார் கிரிக்கெட்டில் 3058 ரன்களை எடுத்துள்ளார் பாபர் ஆசம். பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் லீக், பங்களா தேஷ் லீக், இங்கிலாந்து வைட்டாலிட்டி பிளாஸ்ட் ஆகியவற்றில் 84 போட்டிகளில் 3058 ரன்களை எடுத்துள்ளார் பாபர் ஆசம்.

நேஷனல் டி20 கோப்பையில் இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 259 ரன்கள் எடுத்துள்ளார் பாபர். ஏற்கெனவே இந்தத் தொடரில் ஒரு செஞ்சுரி அடித்துள்ளார். அதே போல் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் எடுத்தவர்கள் வரிசையிலும் விராட் கோலியைக் கடந்தார் பாபர். விராட் கோலி 5 சதங்களை மட்டும் எடுக்க பாபர் ஆசம் 6 வது சதத்தை கடந்த வாரம் எடுத்தார்.

அதிக சதம் எடுத்ததில் ஷேன் வாட்சன், ரோகித் சர்மா ஆகியோரையும் பாபர் ஆசம் கடந்து விட்டார்.

Leave A Reply

Your email address will not be published.