பாடசாலை செல்லும் முன் கட்டாயமாக மாணவர்களுக்கு வீட்டில் பயிற்சி…

பாடசாலை மாணவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சுசி பெரேரா தெரிவித்தார்.

மேலும் பாடசாலைகள் ஆரம்பிக்கும் போது கடைபிடிக்கவேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பாக பெற்றோர்களுக்கு தெளிவூட்டும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாணவர்கள் வீட்டினுள் இருக்கும் இந்த காலத்தில் அவர்களுக்கு முகக்கவசம் அணிவது, அதனை நீக்குவது மற்றும் அணிந்து கொண்டு இருப்பது போன்ற விடயங்களை பழக்கப்படுத்துவதில் பெற்றோர்கள் நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கொவிட் தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டு கடந்த முறை சில வாரங்கள் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பாடசாலைக்கு சமூகமளித்த மாணவர்கள் முகக் கவசம் அணிந்து கொண்டிருப்பதை பெரிதும் விரும்பவில்லை. எனவே முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பாக குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தெளிவவுபடுத்த வேண்டும் என்றும் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சுசி பெரேரா மேலும் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.