நியூஸிலாந்தில் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா.

நியூஸிலந்தில் கொவிட் நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது இதில் ஆக்லாந்தில் அதிக தொற்றாளர்கள் பதிவாகி பாதிக்கப்பட்டுள்ளது . இன்று (14) 71 பேருக்கு நோய்த்தொற்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்து. நேற்று நியூஸிலந்தில் 55 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

டெல்ட்டா தொற்று ஏற்பட்டாலும் இதுவரை நியூசிலாந்தில் 4,472 பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்துடன் இதுவரை நியூஸிலந்தில் 28 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன, இது ஒப்பிடக்கூடிய பல நாடுகளை விட மிகக் குறைவாகும்.

நியூஸிலந்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து டெல்ட்டா வகைக் கொரோனா பிறள்வு பரவத்தொடங்கிய நிலையில் அதிகம் ஆக்லந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாதங்களாக முடக்கநிலை அமுலில் உள்ளது.

தற்போது நியூஸிலந்தில் தடுப்பூசி போடும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. நியூஸிலந்தில் 12 வயதுக்கு மேற்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் 90 வீதமானவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 59 வீதமானவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். நியூஸிலந்தில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.