புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகராக எம்.டி.டி.நிலன்க நியமனம்.

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்திற்கான புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகராக எம்.டி.டி.நிலன்க உத்தியோக பூர்வமாக சமய அனுஸ்டானங்களுடன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கல்குடா வீதி பேத்தாழையில் அமைந்துள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் மதகுருமார்களின் ஆசீர்வாத சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஏற்கனவே இங்கு உதவி பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய பீ.எம்.ஜெயசுந்தர இடமாற்றம் பெற்று நுவரெலியா பகுதிக்கு சென்றதனால் குறித்த இடத்திற்கு பேலியாகொடா பிரதேசத்தில் கடமையாற்றியவர் வாழைச்சேனைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

வாகரை,வாழைச்சேனை,கல்குடா உள்ளிட்ட இடங்கள் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் நிர்வாக பிரதேசமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.