பாடசாலைகள் மீண்டும் திறப்பது தொடர்பான கலந்துரையாடல்.

கிழக்கு மாகாணத்தில் 568 பாடசாலைகள் மீண்டும் திறப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் கிழக்கு மாகாண பணிப்பாளர் என்.பிள்ளைநாயகம் இணைந்து நடாத்திய கலந்துரையாடலில் பிரத்தியேகமாக செயற்பாடுகள் தொடர்பான விடங்கள் ஆராயப்பட்டது.

52536 மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தரவுள்ளனர். பாதுகாப்பான முறையில் பாடசாலைகள் நாடுதழுவிய அளவில் ஆரம்பிப்பது தொடர்பாக விசேட சுற்றுநிருபத்தின் அடிப்படையில் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக ஆரம்பிப்பது தெரடர்பாக தொற்று நோயியல் நிபுணர் தர்சினி குறிப்பிடுகையில் பாடசாலைகளில் கண்டிப்பாக பாவித்த முக கவசங்களை பாதுகாப்பான முறையில் அகற்றுவது சமூக இடைவெளி கைகளை கழுவிக் கொள்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாடசாலை வகுப்பறை சுத்தம் செய்தல் வகுப்பறைகளில் காற்றோட்டத்தினை உறுதிப்படுத்தல் மாணவர்களின் உடல் வெப்பநிலையினை பரிசோதித்தல் ஓய்வரைகளில் அதிகமானவர்கள் இருப்பதை தவிர்பது மாணவர்களுக்கான நோயாளர் அறை ஒன்றையும் ஆயத்தம் செய்வது போன்ற சுகாதார விதிகள் எடுத்துக்கூறப்பட்டது.

மாகாண பணிப்பாளர் என்.பிள்ளைநாயகம் குறிப்பிடுகையில் பாடசாலை வகுப்பறைகளை கவர்சியாக்குவது வெளிச்சூழலை சுத்தப்படுத்துவது மற்றும் 200 மாணவர்களை கொண்ட பாடசாலைகளை ஆரம்பித்தல்.

பாடவிதானங்களை உடனடியாக ஆரம்பிக்காது மெதுவாக ஒரு நாளைக்கு மூன்று பாடங்கள் என்ற அடிப்படையிலும் மாணவர்களை விளையாட்டு மற்றும் சித்திரம் கட்டுரை கவிதைகள் போன்ற செயல்பாடுகளில் கூடியளவு நேரத்தினை செலவிடவைப்பது போன்றவற்றில் மாணவர்களின் ஈடுபாடுகளை அதிகரித்திருப்பது உளவியல் சார் பாடவிதானம் ஒன்றும் நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டு வருகின்றதாகவும் அதனை மாணவர்களுக்கு விரைவில் அறிமுகமாகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மாணவர்களை தங்களின் வீடுகளில் இருந்து தங்களுக்கான நீர் உணவுகளை கொண்டுவரும்படியும் இலவச உணவுகளை தற்போது வழங்கப்படமாட்டாது எனவும் யுனிசெப் நிறுவத்தின் உதவிமூலம் பையில் அடைக்கப்பட்ட பால் உணவு வழங்வுள்ளதாகவும் பாடசாலைகளில் அறிவுறுத்தல்களை உடணடியாக காட்சிப்படுத்தும்படியும் பெற்ரோர்ளுக்கான விழிப்புணர்வுகளையும் வழங்குமாறு குறிப்பிடப்பட்டது இக்கூட்டத்திற்கு வலயகல்வி பணிப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சிகளின் தலைவர்கள் சுகாதார பிரிவினர்களும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.