மத்திய மாகாண வீதி அபிவிருத்தி திட்டங்கள் குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்…..

கண்டி நகரத்தையும் அதனை அண்டிய வீதி வலையமைப்பையும் அபிவிருத்தி செய்து பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசலற்ற நகரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நெடுஞ்சாலை அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மத்திய மாகாண காரியாலயம் இணைந்து செயல்படுத்தியுள்ள வீதி அபிவிருத்தி திட்டங்கள் குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் நெடுஞ்சாலை அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.

கண்டி நகரத்தை அடிப்படையாகக் கொண்டு கடும் நெரிசலைக் குறைப்பதற்காக பாதைகளை விரிவுபடுத்துதல், பாதசாரிகள் சுரங்கப்பாதைகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட இடங்களில் மேம்பாலங்கள் அமைத்தல் போன்ற பல திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. அவற்றில் அதிகமானவை செயற்படுத்தப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை மத்திய மாகாணத்தின் பொறுப்பான பணிப்பாளர் இந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் பாடத்திற்குப் பொறுப்பான அமைச்சர் உட்பட ஏனைய அமைச்சர்களுக்கு விளக்கினார்.

மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களை இணைக்கும் கெடம்பே சந்தியில் மேம்பாலம் அமைப்பதை துரிதப்படுத்துமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

பேராதனை சந்தியில் இருந்து கன்னொருவ சந்தி வரையான பாதையை 4 வழிப் பாதையாக அபிவிருத்தி செய்தல் அந்த வீதியிலுள்ள பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைத்தல், ஹீரஸ்ஸகல சந்திப்பை அகலப்படுத்துதல், பூவெலிகட சந்திப்பை அகலப்படுத்துதல் மற்றும் வெல்ஸ் பார்க் சந்திப்பை அகலப்படுத்துதல் ஆகியவை நிறைவடையும் நிலையில் உள்ளன. கண்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒரு பாலம் அமைக்க முன்மொழியப்பட்டது.

மேலும், 2021 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் கீழ், வில்லியம் கோபல்லவ மாவத்தை மேம்பாடு, பரிகம – ஹலொலுவ வீதி அபிவிருத்தி, அலதெனிய ஈரியாகம வீதி மேம்பாடு, கட்டுகஸ்தோட்டை கலகெதர வீதி வழிப்பாதையாக அபிவிருத்தி செய்தல் , லூயிஸ் பீரிஸ் வீதி அபிவிருத்தி, தர்மராஜா வித்யாலயாவிலிருந்து தென்னேகும்பூர வரையிலான வீதிஅபிவிருத்தி, பேராதனை-ஹல்ஓவிட்ட கட்டுகஸ்தோட்டை வீதி, துதுகேமுனு மாவத்தை அபிவிருத்தி, 2 வது ராஜசிங்க மாவத்தை அபிவிருத்தி, கெலிஓயா வீதி 4 பாதைகளின் கீழ் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படும்.

சுதுஹம்பொலவில் இருந்து தென்னேகும்பூர வரை முன்மொழியப்பட்ட கண்டி சுரங்கப்பாதை திட்டம் மற்றும் பொதுஹெரா முதல் கலகெதரா வரையிலான நடுத்தர அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாணம் குறித்து அமைச்சர் விசேட கவனம் செலுத்தினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, அனுராதா ஜயரத்ன, கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.