கிரெம்ளின் கோப்பை டென்னிஸ்: தொடக்க ஆட்டத்தில் போபண்ணா ஜோடி வெற்றி

கிரெம்ளின் கோப்பை சர்வதேச டென்னிஸ் போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்து வருகிறது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-பாகிஸ்தானின் அய்சம் உல்-ஹக் குரேஷி ஜோடி, ராவென் கிளாசென் (தென்ஆப்பிரிக்கா)-பென் மெக்லாக்லன் (ஜப்பான்) இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரோகன் போபண்ணா ஜோடி 6-2, 6-4 என்ற நேர்செட்டில் கிளாசென்-மெக்லாக்லன் கூட்டணிக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முன்னேறியது.

Leave A Reply

Your email address will not be published.