ராணி இரண்டாம் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதி!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95) ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ராணி இரண்டாம் எலிசபெத், பொது பணிகளின் இருந்து சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறினர். கடந்த புதன் கிழமை பிற்பகல் வழக்கமான சோதனைகளுக்காக ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவனையில் இருந்தார். நேற்று மதியம் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வின்ஸ்டர் கோட்டைக்கு திரும்பி விட்டார். தற்போது அவர் நல்ல மனநிலையில் உள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.