தைவான் தங்கள் நாட்டின் பிரிக்கமுடியாத பகுதி என்று சீனா தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின்ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா கூறி வருகிறது.

இந்த சூழலில் அண்மை காலமாக தைவான் மற்றும் சீனா இடையே ராணுவ பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனா தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கும் என தைவான் அச்சத்தில் உள்ளது.

இதற்கிடையில், சீனா தைவானை தாக்கினால் நாங்கள் நிச்சயம் பாதுகாப்பு அளிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கருத்துக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் நேற்று வாங் வென்பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், சீனாவின் இறையான்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பிற முக்கிய நலன்கள் குறித்த பிரச்சினைகள் வரும்போது சீனா சமரசம் செய்யவோ? அல்லது விட்டுக்கொடுக்கவோ? இடமில்லை.

தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க சீன மக்களின் வலுவான உறுதிப்பாடு, உறுதியான விருப்பம் மற்றும் வலிமையான திறனை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

தைவான் சீனாவின் பிரிக்கமுடியாத பகுதியாகும். தைவான் சீனாவின் உள்நாட்டு விவகாரம். இதில் வெளிநாடுகள் தலையிட அவசியமில்லை’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.