வடக்கில் அதிக அதிபர்களும், ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமுகமளித்தனர்.

வடக்கில் நேற்று, 55 சதவீத மாணவர்களும், 84 சதவீத ஆசிரியர்களும், 97 சதவீத அதிபர்களும் பாடசாலைகளுக்கு சமுகமளித்தனர் என்று மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் நேற்று அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் ஆரம்பமாகின. இதன்படி, வடக்கு மாகாணத்தில் 906 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன. இதில் 882 பாடசாலைகளின் அதிபர்கள் நேற்று பாடசாலைகளுக்கு வருகை தந்தனர்.

இதே போன்று, 7 ஆயிரத்து 48 ஆசிரியர்களின் வருகையை எதிர்பார்த்த போதும் 5 ஆயிரத்து 965 ஆசிரியர்கள் சமுகமளித்தனர் என்று கூறப்படுகின்றது. 88 ஆயிரத்து 702 மாணவர்களில் 49 ஆயிரத்து 418 மாணவர்களின் வருகை பதிவானது.

எனினும், இன்றைய தினம் பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பணிப்பாளர் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.