வீடமைப்பு, உட்கட்டுமாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்.

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் நிதியுதவியின் கீழ் நடைபெற்ற வீடமைப்பு மற்றும் உட்கட்டுமாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இவ் மீளாய்வுக் கலந்துரையாடலில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), அமைச்சின் பொறியியலாளர், அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர், அமைச்சின் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச்செயலக பிரதம கணக்காளர் மற்றும் குறித்த அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இக் கலந்துரையாடலில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் நிதிஒதுக்கீட்டில் நடைபெற்றுவரும் வேலைகளின் பௌதீக மற்றும் நிதிமுன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், குறித்த அமைச்சின் நிதிஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம், நல்லூர், உடுவில், தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெறும் வேலைதிட்டங்கள் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு பார்வையிட்டதுடன், இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சின் மேலதிக செயலாளர் அவர்கள், ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வேலைகளின் பௌதீக மற்றும் நிதி நிலமைகள் முன்னிலையில் உள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.