யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை.

மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது.

மாவட்டத்தில் பெரும் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுகிறது. மாகாண ஆளுநருடன் ஆலோசித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

என யாழ்.மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.