விசுவமடு குளம் வான்பாய தொடங்கியுள்ளது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீர்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள பெரிய குளங்களில் 5 குளங்கள் வான்பாய தொடங்கியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மழைவீழ்ச்சிய இல்லாத நிலையிலும் காட்டாற்று வெள்ள வரத்து காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் மாவட்டத்தில் முத்தையன்கட்டு நீர்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 8 குளங்களில் 20 அடி கொள்ளளவு கொண்ட விசுவமடு குளம் வான்பாய தொடங்கியுள்ளது.
இதேவேளை புதுக்குடியிருப்பு மருதங்குளம் 14 அடி நீர் கொள்ளவு கொண்டகுளம் தொடர்ச்சியாக வான்பாய்ந்து வருகின்றது.

வவுனிக்குள நீர்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 12 குளங்களில் பழையமுறுகண்டிக்குளம் 9 அடி நீர்கொள்ளவு கொண்டகுளம் வான்பாய்கின்றது.
மேலும் 09 அடிநீர்கொள்ளவு கொண்ட கோட்டைகட்டிய குளமும்,11 அடி நீர்கொள்ளவு கொண்ட தேறாங்கண்டல் குளமும் வான்பாய்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மழைவீழ்ச்சியின் அளவு குறைவாக காணப்பட்டாலும் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றன. நீர்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 5 குளங்கள் வான்பாய்வதாக மாவட்ட நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.