கொழும்பில் விபச்சார விடுதி முற்றுகை! – அறுவர் சிக்கினர்.

கொழும்பு, கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸை பொலிஸார், கல்கிஸை நீதிவானிடம் பெற்றுக்கொண்ட விசேட சோதனை உத்தரவுக்கு அமைவாக இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.

இதன்போது குறித்த விடுதியை நடத்திச் சென்ற நபரும் விபச்சார விடுதியை நடத்திச் செல்வதற்க உடந்தையாக இருந்த ஐந்து பெண்களுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எட்டியாந்தோட்டை, பொரலாந்தை, மொரட்டுவை, இரத்மலானை, பொல்கஸ்ஓவிட்ட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20, 48 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.