பதுளையில் இரு மாணவர்கள் உட்பட மூவர் டெங்கு நோயால் காவு! – 261 பேர் பாதிப்பு.

பதுளை பொதுச் சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரு மாணவர்கள் உள்ளிட்டு மூவர் டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதுடன், 261 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்று பதுளை பொதுச் சுகாதார சேவை பணிப்பகம் தெரிவித்துள்ளது.

பதுளையில் டெங்கு தடுப்பு வேலைத்திட்டத்தை பதுளை மாநகர சபையினர், பிரதேச செயலகத்தினர், பொலிஸ் நிலையத்தினர், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விரு நாட்களில் பதுளையில் 450 கட்டடத் தொகுதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றில் அரச உத்தியோகத்தர்களின் அரச வீடுகள், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட 25 இடங்கள், டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட 25 இடங்களின் பொறுப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 261 பேருக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.