மாநாடு படம், ரசிகர்களை எந்த அளவிற்கு பூர்த்தி செய்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் மாநாடு. எப்போதும் போல் இல்லாமல், வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து, அதனை படமாக்கியுள்ளார்.

வெங்கட் பிரபு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி, மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து இப்படம், வெளியாவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பும் பல பிரச்சனைகளையும், இன்னல்களையும் சந்தித்து வெளியானது. அப்படி, அணைத்து பிரச்சனைகளையும் தாண்டி வெளியாகியுள்ள மாநாடு படம், ரசிகர்களை எந்த அளவிற்கு பூர்த்தி செய்துள்ளது.

நண்பனின் காதலை சேர்த்து வைக்க துபாயில் இருந்து ஊட்டிக்கு வருகிறார், அப்துல் காலிக் {சிம்பு}. அங்கு திருமண பெண்ணை கடத்தி, தனது நண்பன் பிரேம்ஜிக்கு திருமணம் செய்ய முயற்சிக்கும் பொழுது, ஆள் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் மேல் காரை ஏற்றி விடுகிறார் அப்துல் காலிக்.

அப்போது, எதிர்பார்க்காத சந்திப்பு நடக்கிறது. அந்த சந்திப்பில் தான், அப்துல் காலிக் மற்றும் தனுஷ்கோடி {எஸ்.ஜே. சூர்யா} இருவரும் சந்திக்கின்றனர். தான் போட்டுவைத்திருந்த திட்டத்தை, அப்துல் காலிக் கெடுத்து விட்டான் என்று கோபத்துடன் திட்டம்தீட்டி, அப்துல் காலிக்-கை வைத்து முதலமைச்சரை {எஸ்.ஏ. சந்த்ரசேகர் } சுட்டு கொள்ள, முடிவு செய்கிறார் தனுஷ்கோடி.

அப்படி, தான் சொல்வதை, அப்துல் காலிக் கேட்க வில்லை என்றால், அவருடைய நண்பர்களை கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார். அதில் பிரேம்ஜியை சுட்டு கொன்றும் விடுகிறார். இதனால், வேறு வலியில்லமல், முதலமைச்சரை துப்பாக்கியால் சுடுகிறார் அப்துல் காலிக். முதலமைச்சரை சுட்டது, அப்துல் காலிக் என்ற ஒரு இசுலாமியர் என்று கூறி, மத கலவரத்தையும் உண்டாக்குகின்றனர்.

இதன்பின், அப்துல் காலிக்கை சுற்றி வளைக்கும் போலீஸ், அப்துல் காலிகை சுட்டு கொள்கிறது. அப்துல் காலிக்கும் மரணமடைகிறார். ஆனால், இங்கு தான் கதையில் ஒரு ட்விஸ்ட். அப்துல் காலிக் இறக்கவில்லை. தலையில் துப்பாக்கி குண்டு பட்டதும், குறிப்பிட்ட ஒரு நாளுக்குள் சிக்கிக்கொண்டு மீண்டும் மீண்டும், அதே நாளில் பயணம் செய்கிறார். இதனை ஒரு கட்டத்தில் தெளிவாக புரிந்துகொள்ளும் அப்துல் காலிக், இது ஏன் நடக்கிறது..? எதற்காக நடக்கிறது..? என்று கண்டுபிடித்து, அதிலிருந்து எப்படி வெளியேறினார் என்பதே இப்படத்தின் மீதி கதை.

புதிய கதைக்களத்துடன் மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு. அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு இணையான தனுஷ்கோடி கதாபாத்திரத்தில், எஸ்.ஜே. சூர்யா, வில்லனாக மிரட்டியெடுக்கிறார். இருவரின் நடிப்பிலும் குறை ஒன்றுமே இல்லை.

கதாநாயகியாக வரும் நடிகை கல்யாணி பிரியதர்ஷினி, தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். பிரேம்ஜி, கருணாகரன், அஞ்சனா கீர்த்தி நடிப்பு ஓகே. போலீஸ் அதிகாரியாக வரும் மனோஜ் பாரதிராஜா எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அரசியல்வாதிகளாக நடித்துள்ள எஸ்.ஏ. சந்திரசேகர், Y.G மஹேந்திரன், சந்திரசேகர் ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பை காட்டியுள்ளனர். மதங்களை வைத்து எந்த அளவிற்கு ஆழமாக அரசியல்வாதிகள் சூழ்ச்சி செய்கிறார்கள் என்றும் காட்டியுள்ளனர். லூப் எனும் புதிய கதைக்களத்தை கமர்ஷியலாகவும், கச்சிதமாகவும் கையாண்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. திரைக்கதை நன்றாக அமைக்கப்பட்டிருந்தாலும், சில இடங்களில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்கிறது.

திரைக்கதையை தனது எடிட்டிங் மூலம் மாஸாக காட்டியுள்ளார், பிரவீன் கே.எல். சிம்பு, எஸ்.ஜே. சூர்யா படத்திற்கு எந்த அளவிற்கு முக்கியமாக இருந்தார்களோ, அதே அளவிற்கு, யுவனின் பின்னணி இசையும் படத்திற்கு மிகமுக்கியமாக அமைந்துள்ளது. சிம்பு மட்டுமல்ல, யுவனும் இப்படத்தில் ஒரு ஹீரோ தான். ஒளிப்பதிவில் காட்சிகளை அருமையாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர், ரிச்சர்ட் எம். நந்தன்.

Leave A Reply

Your email address will not be published.