பள்ளியில் துப்பாக்கி சூடு; 15 வயது மாணவன் கைது.

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர் அருகே உயர்நிலை பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதுதவிர, 6 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் ஒருவர் அந்த பள்ளியின் ஆசிரியர் ஆவார். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய ஆக்ஸ்போர்டு உயர்நிலை பள்ளியை சேர்ந்த 15 வயதுடைய மாணவனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்து உள்ளனர். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு மாணவன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.