ஒமிக்ரான் வைரசை தடுக்க இங்கிலாந்தில் முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வருகிற உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ், இங்கிலாந்தில் தீவிரம் காட்டி வருகிறது. அங்கு இதுவரை 14 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கடைகளிலும், பஸ், ரெயில், மெட்ரோ ரெயில், விமானங்கள் போன்ற பொது போக்குவரத்து சாதனங்களில் முககவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று கூறும்போது, (நேற்று) நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள் பொறுப்பானவை. புதிய வைரசை எதிர்கொள்வதற்கு அவகாசம் தரும்.

நமக்கு தெரிந்தவரையில், நமது தடுப்பூசிகளும், பூஸ்டர் டோஸ்களும் நமக்கு சிறந்த தற்காப்பாக அமையும். எனவே தகுதி வாய்ந்த அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவை புதிய வைரஸ் பரவலை மந்தமாக்குவதுடன், நம் ஒவ்வொருவரையும் பாதுகாக்கும்” என குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.