ஐபிஎல் 2022: அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட பெருந்தலைகள்!

ஐபிஎல் 15ஆவது சீசனில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைவதால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. இதனால் அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும்.

அந்தவகையில், இன்றுதான் அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட இன்றே கடைசி நாள் என்பதால் அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுவிட்டது.

ஐபிஎல் அணிகள் சில பெரிய வீரர்களை விடுவித்துள்ளன. அந்தவகையில், ஐபிஎல் அணிகள் விடுவித்துவிட்ட பெரிய வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.

2018ஆம் அண்டிலிருந்து கேப்டனாக இருந்து பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தியதுடன், மிகச்சிறப்பாக விளையாடி ரன்களை கேஎல் ராகுலை பஞ்சாப் கிங்ஸ் அணி கழட்டிவிட்டுள்ளது. அதேபோல டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்துவந்த ஸ்ரேயாஸ் ஐயரை அந்த அணி கழட்டிவிட்டுள்ளது.

2016 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸுக்கு கோப்பையை வென்று கொடுத்த டேவிட் வார்னரை அந்த அணி கழட்டிவிட்டுள்ளது. அந்த அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்துவந்த ரஷீத் கானையும் சன்ரைசர்ஸ் அணி கழட்டிவிட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளைகளாக இருந்த சுரேஷ் ரெய்னா, டுவைன் பிராவோ, ஃபாஃப் டூ பிளெசிஸ் ஆகியோரையும் சென்னை அணி கழட்டிவிட்டுள்ளது.

இவர்கள் தவிர, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஸ்வின், பென் ஸ்டோக்ஸ், முகமது ஷமி, ஜானி பேர்ஸ்டோ, ஸ்டீவ் ஸ்மித், ககிசோ ரபாடா, ஆகிய பெரிய வீரர்கள் அந்தந்த அணிகளால் கழட்டிவிடப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.