பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்டதைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு.

அக்குறணை கல்வி மேம்பாட்டுக்கான ஐக்கிய அமைப்பினரின் ஏற்பாட்டில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி எஸ். எம். எம். மஸாஹிர் நளிமி அவர்களுக்கு பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்டதைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் 05-12-2021 ஞாயிற்றுக் கிழமை மு. ப 9.00 மணிக்கு அஸ்ஹர் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ. எல்.. அன்வர் தலைமையில் இடம்பெறும்.

ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் எப். எம். பாஸில் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எம். எம். எம் நாஜிம் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். விசேட பேச்சாளராக தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறைப் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

அத்துடன் வாழ்த்துரையினை முன்னாள் அக்குறணை முஸ்லிம் பாலிகா கல்லூரி அதிபர் ரிஹானா செய்ன், முன்னாள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் எஸ். ஏச். எம். சபீக், பேருவளை ஜாமியா நளிமியா கலாபீடத்தின் பகுதிநேர விரிவுரையாளர் உஸ்தாத் எம். ஏ. எம். மன்சூர், அக்குறணை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி எம். எப். எம். அஸ்மி, அக்குறணை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம். ஏ. எம். சியாம் (யூசுபி) ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

நிகழ்ச்சித் தொகுப்பினை பெரோஸ் மஹ்ரூப் அவர்களும் ஏற்புரையினை தென்கிழக்குப் பல்கலைக்கழக அரபு மற்றும் இஸ்லாமிய கற்கை பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ். எம். எம். மஸாஹிர் அவர்களும் ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் எம். ஜே. எம். பைசல் நன்றியுரையினையும் நிகழ்த்துவர்.

இதில் விசேட அம்சமாக வரவேற்பு கீதம், வாழ்க்கை வரலாறு தொடர்பான காணொளி காட்சிப்படுத்தல், மலர் வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு பட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.