தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. குறிப்பாக 5வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

ஒருநாள் இரவுக்குள் தென் ஆப்பிரிக்காவில் 16,055 பேர் பாதிக்கப்பட்டனர், 25 பேர் உயிரிழந்தனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்ககப்பட்டார்களா அல்லது ஒமைக்ரானால் உயிரிழந்தார்களா என்பது உறுதியாகவில்லை.

ஆனால், கடந்த காலத்தில் டெல்டா வைரஸைவிட அதிகமான அளவு மருத்துவமனையில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. 3-வது அலையில் 5வயதுக்குட்டபட்ட குழந்தைகள், பதின்பருவத்தினர் அதாவது 15வயது முதல் 19வயதுள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டதைப்பார்த்தோம். அந்த அளவுக்கு குழந்தைகள் பாதிக்கப்படவில்லை என்றாலும், 2-வது அதிகமான பாதிப்பு குழந்தைகளுக்கு இருக்கிறது.

தென் ஆப்பிரிக்க சுகதாார துறை அமைச்சகத்தின் பரவக்கூடிய நோய்களுக்கான தேசிய ஆய்வு மையத்தின் மருத்துவர் வாசிலா ஜாஸட் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தென் ஆப்பிரி்க்காவில் 4-வது அலை தொடங்கியுள்ளது.

அனைத்து வயதுப் பிரிவினரும் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. ஆனால், அதில் குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குழந்தைகளிடையே பாதிப்பு என்பது நாங்கள் எதிர்பார்த்த அளவு குறைவுதான். ஆனால், 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்தார்போல் 2-வது அதிக பாதிப்பு குழந்தைகளுக்குதான் இருக்கிறது.

கடந்த காலங்களில் நாங்கள் பார்த்ததைவிட இப்போது வித்தியாசமாக இருக்கிறது. அதாவது 5வயதுக்குட்பட்ட குழந்தைகள் மருத்துமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்

பரவக்கூடிய நோய்களுக்கான தேசிய ஆய்வு மையத்தின் மருத்துவர் மைக்கேல் க்ரூம் கூறுகையில் “ குழந்தைகளுக்கு திடீரென தொற்று அதிகரித்துள்ளது குறித்து தீவிரமான ஆய்வு தேவை. 4-வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். இதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் எந்தபிரிவினர் பாதிக்கப்படுவார்கள் என்பது வரும் வாரங்களில் தெரியும். குழந்தைகளுக்கான படுக்கைகள், செவிலியர்கள், மருந்துகள், ஐசியுக்கள் ஆகியவற்றை தயார் செய்வது அவசியம்.” எனத் தெரிவித்தார்

தென் ஆப்பிரி்க்காவில் காட்டெங் மாகாணத்தில்தான் கரோனா தொற்று தீவிரமாக இருக்கிறது. ஏறக்குறைய 80சதவீத தொற்று இங்குதான் இருக்கிறது. இந்த மாகாணத்தின் சுகாதாரதாரப் பிரிவின் தலைவர் மருத்துவர் சகிசி மலுகே கூறுகையில் “ இளம் வயதுப் பிரிவினர், கர்ப்பணிப் பெண்கள் ஆகியோரிடையே கரோனா தொற்று அதிகரித்துள்ளது,

இது குறித்துஆய்வுகள் நடத்தப்பட்டுவருகிறது. ஏன் குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான விடை வரும் வாரங்களில் கிைடக்கும். தென் ஆப்பிரிக்காவின் 9 மாகாணங்களில் கரோனா தொற்று அதிகிரத்துள்ளது” எனத் தெரிவி்த்தார்

Leave A Reply

Your email address will not be published.