யாழ்ப்பாணத்தில் ஆயுதமேந்திய கும்பல் தாக்குதல், சொத்துக்களுக்கு சேதம்

யாழ்ப்பாணத்தில் இரண்டு பிரதேசங்களில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் கடந்த 23ஆம் திகதி இரவு இரு வீடுகளையும் , ஒருவரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் கடந்த 23ஆம் திகதி இரவு மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டியொன்றில் வந்த நபர்கள், வீடொன்றில் நுழைந்த முகமூடி அணிந்து வந்த நபர்கள் , கூரிய ஆயுதங்களால் , வீட்டிலிருந்த பல சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.

இதேவேளை, யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியிலுள்ள வாரகி அம்மன் இந்து கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றிற்குள் அன்றிரவு மேலும் பத்து பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல் புகுந்து வீட்டில் இருந்த பல சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அச் சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கானவர் ஒருவர் பலத்த காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியோரின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், ஆவா கும்பலோ அல்லது வேறு சில ஆயுதம் தாங்கிய கும்பலோ இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் , சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கோப்பாய் பொலிஸாரும் யாழ்ப்பாண பொலிஸாரும் மேலும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.