சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கும் ஜப்பான்.

சீனாவில் உய்குர் இன முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் சீனா இதை திட்டவட்டமாக மறுக்கிறது. இந்த சூழலில் உயர்குர் இன முஸ்லிம்கள் விவகாரத்தை சுட்டிக்காட்டி சீனா தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

அதாவது, வீரர்களை மட்டுமே சீனாவுக்கு அனுப்புவோம், அரசு அதிகாரிகள் யாரையும் அனுப்ப மாட்டோம் என அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகளையும் இதே போல் அறிவித்தன. இந்த நிலையில் சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு அரசு அதிகாரிகளை அனுப்பப்போவதில்லை என ஜப்பான் அறிவித்துள்ளது. போட்டிகளில் பங்கேற்கு வீரர்கள், அவர்களின் பயிற்சியாளர்கள் மற்றும் ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஆகியோர் மட்டுமே சீனாவுக்கு அனுப்பப்படுவார்கள் என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.