பிபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் த்ரில் வெற்றி.

பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் – பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் விதமாக, பெர்சென், கிறிஸ் லின், டாம் கூப்பர், ஹஸலெட் என அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுடன் வெளியேறினேர்.

அடுத்து வந்த வீரர்களும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 19.1 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை மட்டுமே சேர்த்தது.

சிட்னி சிக்சர்ஸ் அணி தரப்பில் சீன் அபேட் 4 விக்கெட்டுகளையும், துவர்ஷுயிஸ், ஹய்டன் கீர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய சிட்னி சிக்சர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜோஷ் பிலிப்பே, ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அடுத்து களமிறங்கிய டேனியல் ஹூக்ஸ், ஹென்ட்ரிக்ஸ், ஜோர்டன் சில்க், டேனியல் கிறிஸ்டியன் என வரிசையாக விக்கெட்டுகளை இழந்து சிக்சர்ஸ் அணி தடுமாறியது. இதனால் 35 ரன்களுக்குள்ளாகவே அந்த அணி 6 விக்கெட்டுகளையும் இழந்தது.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் அடுத்து களமிறங்கிய சீன் அபேட் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய அபேட் 37 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிபெறச் செய்தார். இதன்மூலம் 20 ஓவர்களின் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.