யோகிபாபு மகன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர்கள்!

சமீபத்தில் நிகழ்ந்த பிரபல நடிகர் யோகி பாபு மகனின் பிறந்தநாளில் உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது யோகிபாபு மகன் பிறந்த நாளில் இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகிபாபு தற்போது ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் யோகிபாபு, மஞ்சு பார்கவி என்ற பெண்ணை கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவருடைய குலதெய்வம் கோவிலில் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதியின் குழந்தைக்கு விசாகன் என்று பெயர் வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் யோகி பாபு தனது மகனின் முதலாவது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவிற்கு பல திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களாகிய தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் விஜய்சங்கர் ஆகிய இருவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு யோகிபாபுவின் குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஏற்கனவே நடராஜன் மற்றும் யோகிபாபு ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், ஒரு சில முறை இருவரும் நேரில் சந்தித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.