சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஹபீஸ் ஓய்வு.

பாகிஸ்தான் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்தவர் முகமது ஹபீஸ். 41 வயது ஹபீஸ், பாகிஸ்தான் அணிக்காக 2003 முதல் விளையாடி வருகிறார்.

இதுவரை 55 டெஸ்டுகள், 218 ஒருநாள், 119 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள ஹபீஸ், டெஸ்டில் 10 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 11 சதங்கள் என மொத்தம் 10ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கடைசியாக விளையாடிய ஹபீஸ், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார்.
சர்வதேச டெஸ்டில் இருந்து டிசம்பர் 2018இல் ஓய்வு பெற்ற ஹபீஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு தேர்வாகவில்லை.

மேலும் ஹபீஸ் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி 32முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். மேலும் பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாகவும் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.