ஒரு நாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக டெம்பா பவுமாவும், துணைக்கேப்டனாக கேஷவ் மகாராஜும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் காயம் காரணமாக நட்சத்திர் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அறிமுக வீரர் மார்கோ ஜான்சன் தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா ஒருநாள் அணி: டெம்பா பவுமா (கே), கேசவ் மகராஜ், குயின்டன் டி காக், ஜுபைர் ஹம்சா, மார்கோ ஜான்சன், ஜான்மேன் மலான், சிசண்டா மாகலா, ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, வெய்ன் பார்னெல், அண்டில் பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, ரஸ்ஸி வான் டெர் டுசென், கைல் வெர்ரைன்.

Leave A Reply

Your email address will not be published.